×

எஸ்ஐ திடீர் சாவு

விக்கிரவாண்டி, நவ. 13: விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் நலமின்றி சிகிச்சை பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் தேவநாத சுவாமி நகரை சேர்ந்தவர் பழனி(53). இவர் விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். கடந்த 10ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vikravandi ,Villupuram Government Medical College Hospital ,Palani ,Devanathaswamy Nagar, Villupuram ,Villupuram West Police Station… ,
× RELATED தனியார் நிறுவனத்தில் லாரி மோதி பெண் பலி