×

வேதாரண்யத்தில் ஓய்வுதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம், நவ. 12: வேதாரண்யத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து துறை அரசு ஓய்வூதியர் சங்கத்தினர் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டத் தலைவர் உலகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், வனத்துறை ஆகிய ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓயவூதியர் சங்கதலைவர் உலகநாதன் வட்ட செயலாளர் தெட்சணாமூர்த்தி வட்ட பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட மாவட்ட, வட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

 

Tags : Pensioners' Association ,Vedaranyam ,Tamil Nadu Government All Department Pensioners' Association ,Vedaranyam Taluk Office ,All Department Government Pensioners' Association ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்