கரூர், நவ. 12: க.பரமத்தி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஒரு பதிவறை எழுத்தர் பணியிடம் நிரப்புவதற்கு அழைப்பாணை பெற்றவர்கள் ஒன்றிய ஆணையர் நவம்பர் 12ம்தேதி காலை 10 மணிக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.க.பரமத்தி ஒன்றியம், ஒன்றிய தலைப்பின்கீழ் காலியாக உள்ள ஒரு பதிவறை எழுத்தர் பணியிடம் நிரப்புவதற்கு என்ற இணையதளம் மூலம் நேர்காணல் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணை பெற்றவர்கள் மட்டும் நவம்பர் 12ம்தேதி காலை 10 மணிக்கு க.பரமத்தி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
