×

நாரைக்கிணறு அருகே கீழகோட்டை ரயில்வே கேட் இன்று மூடல்

நெல்லை, நவ.12: பராமரிப்பு பணிகள் காரணமாக நாரைக்கிணறு அருகே கீழக்கோட்டை ரயில்வே கேட் இன்று மூடப்பட உள்ளது. நெல்லை – வாஞ்சிமணியாச்சி வழித்தடத்தில் நாரைக்கிணறு அருகே கைலாசபுரம் – கீழக்கோட்டை பகுதியில் உள்ள 6 வது எண் ரயில்வே கேட் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட உள்ளது. அந்த ரயில்வே கேட் இன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மூடப்பட்டிருக்கும். அந்த ரயில்வே கேட் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Keezhakottai Railway Gate ,Naraikinaru ,Nellai ,Railway Gate No. 6 ,Kailasapuram-Keezhakottai ,Nellai-Vanchimanyachchi route ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்