- அரியலூர்
- அரியலூர் மாவட்டம்
- கலெக்டர்
- ரத்தின சாமி
- எஸ்.பி. விஷுவேஷ்
- வாரணவாசி, அரியலூர் மாவட்டம்
- வாரணவாசி பிள்ளையார் கோயில்
அரியலூர்: சிலிண்டர்கள் வெடித்த இடத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, எஸ்.பி. விசுவேஷ் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. வாரணவாசி பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பும்போது லாரி விபத்தில் சிக்கியதில் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. லாரியில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில் லாரி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
