×

சிவகிரி அருகே வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்

தென்காசி,நவ.11: சிவகிரி அருகே மேலக்கரிசல் குளத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று ஏராளமானோர் திரண்டு வந்து தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ராயகிரி பேரூராட்சி மேலக்கரிசல்குளம் உள்ள ஊரில் 2004ம் ஆண்டில் ஐந்து ஏக்கர் இடம் வாங்கி 100 பிளாட்டுக்கள் சர்வே எண் 1165ல் போடப்பட்டது. 100 பிளாட் பதிவு செய்வதற்கு என்ஓசி வாங்கி பதிவு செய்யப்பட்டது. இதில் தற்போது 80 வீடு கட்டப்பட்டுள்ளது. இதில் 30 பிளாட் வீடு கட்டியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா ஆவணம் உள்ளது. மீதமுள்ள 70 குடும்பங்களுக்கு பட்டா கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறுகின்றனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் பட்டா வழங்க வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Patta ,Sivagiri ,Tenkasi ,Melakarisalkulam ,Tenkasi District Collector ,Rayagiri Town Panchayat ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்