×

புதுக்ேகாட்டையில் மக்கள் குறைதீர் கூட்டம் 219 மனுக்கள் குவிந்தன

புதுக்கோட்டை, நவ.11: புதுக்ேகாட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 219 மனுக்கள் குவிந்தன. மனுமீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அருணா உத்தரவு. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 219 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Tags : Pudukkata ,Pudukkottai ,People's Low Level Meeting ,Collector ,Aruna ,People's Reduction Day meeting ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்