×

பைக்குகள் மோதி ஒருவர் படுகாயம்

திருவாரூர், நவ. 11:திருவாரூர் பெருங்குடி கீழப்படுகை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(40). இவர் தனது ைபக்கில் திருவாரூர் ரயில் நிலையம் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிரே கொடிக்கால்பாளையம் சேர்ந்த முகமது ஆதில்(22) என்பவர் ஓட்டிவந்த ைபக் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சுரேசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவாரூர் சப்.இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் முகமது ஆதிலின் இரு சக்கர வாகனனத்தை பறிமுதல்செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvarur ,Suresh ,Perungudi Keezhapadugai ,station ,Mohammed Adil ,Kodikalpalayam ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்