- ஆர் உதயகுமார்
- டிடிவி தினகரன்
- சென்னை
- AMMK
- பொதுச்செயலர்
- உதயகுமார்
- எடப்பாடி பழனிசாமி
- கொடநாடு
- ஜெயலலிதா
- அஇஅதிமுக
சென்னை: விரக்தியின் உச்சத்தில் ஆர்.பி.உதயகுமார் உள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதற்கு உதயகுமார் விமர்சனம் செய்தார்.ஜெயலலிதா 10 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் டிடிவி தினகரனின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என விமர்சித்திருந்தார். இந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் பேசியதற்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அடையாறில் செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,
விரக்தியின் உச்சத்தில் ஆர்.பி.உதயகுமார்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார். விரக்தி காரணமாக என்னை
ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
துரோகம் தன்னுடைய வேலையை காட்டும்
துரோகம் தன்னுடைய வேலையை காட்டும்.
மனநலம் குன்றியவர் போல் பேசுகிறார்
மனநலம் குன்றியவர் போல் ஆர்.பி.உதயகுமார் உள்ளார்.
சுயநலத்தால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுயநலத்தால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது. எல்லோரும் ஓரணியில் திரளவேண்டும் என பாஜக தலைவர்கள் பேசினர். இவ்வாறு பேசினார்.
