×

கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி காரியாபட்டி சிறுவன் சாதனை

காரியாபட்டி : காரியாபட்டியை சேர்ந்த 5 வயது சிறுவன், ஆப்ரிக்கா கண்டத்தின் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்ப்பெண் முத்தமிழ்செல்வி.

இவர் 5 சிறுவர்கள் உள்பட 10 பேர் கொண்ட குழுவுடன் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உஹூரு சிகரம் (5,895 மீ) ஏறி சாதனை படைத்துள்ளார். இவரது குழுவில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் சிவவிஷ்ணுவும் இடம் பெற்றிருந்தார்.

இதன்மூலம் உலகத்திலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறிய மூன்றாவது சாதனையாளர் என்ற சாதனையை சிவவிஷ்ணு படைத்துள்ளார். மேலும் வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோருடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kariyapatti ,Mount Kilimanjaro ,Africa ,Muthamiz Selvi ,Mount Everest ,
× RELATED மதுரையில் நடைபெற்ற TN Rising...