ஜம்மு: பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்த முகமது அர்ஷத் என்ற ஆசிப் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், தேக்வார் தெர்வான் கிராமத்தை சேர்ந்தவர். முகமது அர்ஷத் கடந்த 2003ம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் தலைமறைவாக இருந்தார். அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய முகமது அர்ஷத் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அர்ஷத்தை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து காஷ்மீர் புலனாய்வு பிரிவு போலீசார் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் லகித் அகமது என்பவர் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அகமது துபாய் செல்வதற்கு அர்ஷத் உதவி செய்துள்ளார். அர்ஷத்தின் உத்தரவுப்படி பீர் பஞ்சால் பகுதியில் தீவிரவாதம் மற்றும் போதை கடத்தல் நடவடிக்கைகளை துவங்குவதற்கு அகமது ரகசிய கூட்டத்தை நடத்தியுள்ளார் ’’ என்றனர்.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய போதை கடத்தல், தீவிரவாத தலைவன் காஷ்மீரில் கைது
- பாக்கிஸ்தான்
- காஷ்மீர்
- ஜம்மு
- முகமது அர்ஷாத்
- ஆசிப்
- தேக்வார் தேர்வான்
- பூஞ்ச் மாவட்டம்
- ஜம்மு மற்றும் காஷ்மீர்
- சவூதி அரேபியா
