திருமானூர் வட்டாரத்தில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம்

அரியலூர், நவ. 7: அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 08.11.2025 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, மேலபழூரில் இம்முகாமானது நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி கேட்டுகொண்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது,

தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் துவக்க விழா 02.08.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவங்கி வைக்கப்பட்டது. நமது அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் 08.11.2025 அன்று அரசு மேல்நிலைப்பள்ளி, மேலபழூரில் இம்முகாமானது நடைபெற உள்ளது.

மேலும், வருகின்ற 08.11.2025 அன்று திருமானூர் வட்டாரம், மேலபழூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமில் சிறப்பு பிரிவு மருத்துவர்களான எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் பொது மருத்தும் மற்றும் சர்க்கரை நோயியல் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், பல் மருத்துவர், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், நரம்பியல் மருத்துவர், தோல்நோய் மருத்துவம், இருதயவியல் மருத்துவர், கதிரியியல் மருத்துவர்,

ஆகியோர் இம்மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர். மேலும், எக்கோ கார்டியோகிராம், அல்ட்ராசோனாகிராம், நடமாடும் எக்ஸ்ரே வாகனம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுவது மற்றும் இரத்த பரிசோதனை சேவைகள் வழங்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ சேவை முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

 

Related Stories: