×

முன்னாள் ராணுவத்தினர் குறைதீர் கூட்டம்

விருதுநகர், நவ.5: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவத்தினர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.  விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர் தொடர்பான மனுக்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் 15 மனுக்கள் பெறப்பட்டதை தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களை கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் டிஆர்ஓ ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Virudhunagar ,Virudhunagar Collector ,
× RELATED விருதுநகரில் ரத்ததானம்