×

குஜராத் மருத்துவமனையில் சோதனை கர்ப்பிணிகளின் அந்தரங்க வீடியோ ஆபாச சந்தையில் விற்பனை

அகமதாபாத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு மருத்துவமனையில், நோயாளிகளின் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா நெட்வொர்க்கிற்கு மிக எளிமையான பாஸ்வேர்டை பயன்படுத்தியுள்ளனர். இதை தெரிந்து கொண்ட ஹேக்கர்கள், மருத்துவமனையின் கேமராக்களின் பதிவுகளை சட்டவிரோதமாக தேடியுள்ளனர். கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் இந்த மருத்துவமனை மற்றும் நாடு முழுவதும் இதேபோல் பாதுகாப்பு குறைவாக இருந்த அமைப்புகளிடம் இருந்து 50,000 வீடியோ காட்சிகளை இந்தக் கும்பல் திருடியுள்ளது. திருடப்பட்ட இந்த வீடியோக்களில், பெண் நோயாளிகளின் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான மிகவும் அந்தரங்கமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோக்களை முதலில் தனிப்பட்ட டெலிகிராம் சேனல்களில் பரப்பிய கும்பல், பின்னர் அவற்றை யூடியூப் போன்ற பொது தளங்களிலும் பதிவேற்றி விநியோகித்துள்ளது. வழக்குப்பதிவு செய்த அகமதாபாத் சைபர் கிரைம் பிரிவு போலீசார், வீடியோக்களைப் பரப்பிய பலரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Gujarat ,Ahmedabad ,Payal Maternity Hospital ,Rajkot, Gujarat ,
× RELATED டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு!