×

சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

பெரியபாளையம், நவ.5: பெரியபாளையம் அருகே, சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி கோயில் உள்ளது. முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில், கோயிலின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags : Siruvapuri Murugan Temple ,Lord Shiva ,Periypalayam ,Balasubramaniam ,Swamy Temple ,Siruvapuri ,Siruvapuri Temple ,Lord Murugan ,Siruvapuri Murugan Temple… ,
× RELATED அம்பேத்கர் நினைவு நாளில் 2034...