×

அதிமுக ஐடி விங்க் பொறுப்பாளர்களுடன் இரண்டாவது நாளாக எடப்பாடி ஆலோசனை

சென்னை: ராயப்பேட்டை அதிமுகு அலுவலகத்தில் 2வது நாளாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். சேலம் மாநகர், சேலம் புறநகர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாநகர், புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திருப்பூர் மாநகர், புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, கோவை மாநகர், புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரி ஆகிய 17 தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராஜ் சத்யன், துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Tags : Liadapadi ,IT Wing ,Chennai ,Secretary General ,Edappadi ,Rayapet Adamugu Office ,Salem Managar ,Salem Suburb ,Krishnagiri East ,Krishnagiri West ,Dharmapuri ,Namakkal ,Erode Managar ,Suburb ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...