மாநில அளவிலான கலைத் திருவிழாவில் கலந்து கொள்ள புளியம்பாறை அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

கூடலூர், நவ. 1: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர். பேச்சுப் போட்டியில் மாணவன் விஷாக், நாட்டு புற தனி நடனத்தில் மோனா ஸ்ரீ, நாட்டுபுற குழு நடனத்தில் அனுஸ்ரீ, வன்ஷிகா ஸ்ரீ, மோனா ஸ்ரீ, ஆதிலக்ஷன், விஷாக், விஷ்ணு ஆகியோர் முதலிடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் கரூரில் வரும் நவம்பர் 25ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.  மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

 

Related Stories: