×

சாலை, பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை

ஜெயங்கொண்டம், டிச. 31: சாலை, பொது இடங்களில் மது அருந்துவோர், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்ட டிஎஸ்பி திருமேனி, ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின்பேரில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடு விதிமுறைகள் தற்போதும் அமலில் உள்ளதால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் காவல்துறை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். விதியை மீறும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தீவிர வாகன சோதனை நடத்தப்படும்.வாகன ஓட்டிகள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி வந்தாலும், கூடுதல் நபர்களை வாகனத்தில் ஏற்றி வந்தாலும் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 31ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் எந்த கடைகளும் திறந்திருக்க அனுமதியில்லை. சாலைகள் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவோர் மீதும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் நோய் தொற்று பரவும் தீவிரத்தை உணர்ந்து அரசின் விதிமுறைகளை பின்பற்றி விபத்தில்லாத, உயிர்பலி இல்லாத,தொற்று இல்லாத எளிய இனிய புத்தாண்டை வரவேற்று ஜெயங்கொண்டம் பகுதி போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : road ,places ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...