×

மீன்சுருட்டி கிராமத்தில் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

தா.பழூர், டிச. 31: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் மற்றும் பாரத மாநில வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் 70 பெண்களுக்கு கறவை மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு முறைகள் குறித்த 10 நாட்கள் பயிற்சி மீன்சுருட்டி கிராமத்தில் நடந்தது. பயிற்சியில் கறவை மாடுகள் வளர்ப்பதில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள், கொட்டகை அமைத்தல், கன்றுகள் பராமரிப்பு, கிடாரிகள் மேலாண்மை, மாடுகளில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறை மற்றும் தீவன மேலாண்மை முறைகள் குறித்து கால்நடை மருத்துவர் கார்த்திக் விளக்கம் அளித்தார். தொழில்நுட்ப வல்லுனர் ராஜ்கலா பங்கேற்று மண்புழு உரத்தின் முக்கியத்துவம், மண்புழு உரத்தில் உள்ள சத்துக்கள், பயிர்களில் ஏற்படும் வினையியல் மாற்றங்கள், தயாரிப்பில் உள்ள பல்வேறு முறைகள் குறித்து பயிற்சி அளித்தார். மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள் குறித்த செயல்விளக்கத்தை தொழில்நுட்பவல்லுனர் அசோக்குமார் அளித்தார். மேலும் அசோலா வளர்ப்பு குறித்த பயிற்சியை தொழில்நுட்ப வல்லுனர் திருமலைவாசன் செயல்முறை விளக்கம் அளித்தார். பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகள் குறித்த பயிற்சியுடன் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதா குறித்த கேள்விகளுக்கு முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் பதில் அளித்தார். கறவை மாடு மற்றும் மண் புழு வளர்ப்பில் உள்ள மதிப்பூட்டி விற்பனை செய்யும் தயாரிப்பு, கடனுதவி பெற திட்ட அறிக்கை தயார் செய்வது குறித்து மனையியல் தொழில்நுட்ப வல்லுனர் சோபனாகூறினார். மேலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் துரைராஜ் மற்றும் பயிற்றுனர்கள் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.


Tags : Meenchurutti ,village ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...