- பாஜக
- காங்கிரஸ்
- கரூர்
- மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு
- கரூர் கலெக்டர்
- Jyothimani
- கர்நாடகா...
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவரான ஜோதிமணி எம்பி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் ஜோதிமணி எம்பி அளித்த பேட்டி: கர்நாடகாவில் ஒரு ஓட்டை நீக்குவதற்கு ஒரு கம்பெனிக்கு ரூ.80 கொடுத்து பெருமளவில் நீக்கப்பட்டுள்ளது என எஸ்ஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ரூ.80 யார் கொடுத்தார், நிச்சயம் பாஜதான் கொடுத்திருக்கும். அவ்வாறு ரூ.80 கொடுத்து ஓட்டை நீக்கும் சூழல் இருக்கு. இது சம்பந்தமாக ஐபி அட்ரஸ் அனைத்தையும் எங்களிடம் தாருங்கள் என கர்நாடக எஸ்ஐடியினர் கேட்கின்றனர். அந்த ஐபி அட்ரஸ் தேர்தல் ஆணையத்தின் சர்வரில் உள்ளது. நீங்க நேர்மையானவங்க என்றால் அந்த ஐபி அட்ரஸை தர வேண்டியதுதானே.
பாஜ தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் ஊழல் செய்கின்றனர். இதேபோல், தமிழ்நாட்டிலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் செய்வதற்கு ஒரு முயற்சி நடைபெறுகிறது. அது பலவிதமான பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தும். தேர்தல் கமிஷன் பாஜவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பாஜ ஆளும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செயல்படுத்தவில்லை. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அமைதியை சீர்குலைக்கும் செயல். பாஜவும், தேர்தல் கமிஷனும் சேர்ந்து நடத்தும் ஊழலிலேயே தேர்தல் முடிவு தெரிந்து விடுகிறது. அதிமுக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் வருவதற்காக காத்திருந்தது போல, வந்தவுடன் ஆதரிக்கின்றனர். பாஜவின் பிடியில் அழிவில் இருக்கும் அதிமுக, இதற்கு துணை போகக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
