×

கரூர் சம்பவத்தில் காப்பாற்றவே சிபிஐ விசாரணை கூட்டணிக்குள் கொண்டு வரவே விஜய் மீது வழக்கு பதியவில்லை: மாமல்லபுரத்தில் தனிமையில் சந்தித்தது ஏன்? பாஜ மீது சீமான் அட்டாக்

நெல்லை: ‘பாஜ கூட்டணிக்குள் வளைக்கவே கரூர் சம்பவ வழக்கில் தவெக தலைவர் விஜய் பெயர் சேர்க்கப்படவில்லை. அவரை காப்பாற்றவே சிபிஐ விசாரணை நடக்கிறது’ என்று சீமான் தெரிவித்தார். நெல்லை மேலப்பாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கேள்வி-பதில் நிகழ்வில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று காலை வந்தார். இதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமானவர் நடிகர் விஜய். இந்த வழக்கில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை. அங்கு கூடிய கூட்டம் விஜய்யை பார்ப்பதற்காகவே வந்திருந்தனர். இதனால் தான் அங்கு நெருக்கடி ஏற்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளது. ஆனால் விஜய்யை வழக்கில் சேர்க்காததற்கு காரணம் என்ன? கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து விஜய் தனிமையில் சந்தித்து பேசியுள்ளார்.

இப்படி இருந்தால் சிபிஐ விசாரணை எப்படியிருக்கும்? குற்றப்பத்திரிகையில் விஜய், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பெயர் இடம் பெறவில்லையே, ஏன்? சிபிசிஐடி விசாரணையின் போது ஜாமீன் கேட்ட புஸ்ஸிஆனந்த் தற்போது ஜாமீன் வேண்டாம் என கூறுவது எதனால்? சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்படி என்றால் இந்த விசாரணை எப்படி நடக்கும். திக்கப்பட்டவர்கள்தான் என்ன கூறுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விஜய்யை பாதுகாத்து கூட்டணிக்குள் (பாஜ-அதிமுக கூட்டணி) கொண்டு வரவே சிபிஐ விசாரணை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* 1.25 கோடி வட இந்தியர்களுக்கு வாக்குரிமை அளித்தால் தமிழகத்திற்கு ஆபத்து
சீமான் கூறுகையில், ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது. வட இந்தியர்களுக்கு வாக்குரிமையை கொடுக்கக் கூடாது. வேலை செய்ய வந்த இடத்தில் வேலை கொடுத்து, சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும். தமிழகத்தில் ஒன்றே கால் கோடி வட இந்தியர்கள் உள்ளனர். இவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் பாஜவுக்குதான் அவர்கள் வாக்களிப்பார்கள். தமிழகம் வடக்கே போய்விடும். தமிழகம் மிகவும் ஆபத்தான நிலைக்கு மாறிவிடும். அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை நாம் தமிழர் கட்சி எதிர்க்கும்’ என்றார்.

* பிப்.7 மாநாட்டில் வேட்பாளர் பட்டியல்
பிப்.7ம் தேதி திருச்சியில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்போம் என்று சீமான் தெரிவித்தார்.

Tags : CBI ,Karur ,Vijay ,Mamallapuram ,Seeman ,BJP ,Nellai ,Thavega ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...