×

நேரு காலத்தில் இருந்தே வாக்காளர் பட்டியல் திருத்தம்: நயினார் நாகேந்திரன் பேட்டி

கோவை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் என்பது நேரு பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே இருக்கிறது என நயினார் நாகேந்திரன் கூறினார்.கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: மோன்தா புயல் இன்று கரையை கடக்கும் நிலையில், புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட பாஜ தொண்டர்களை தயார் நிலையில் இருக்க சொல்லி உள்ளோம். வாக்காளர்கள் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்ப்பு என்பது நேரு பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே இருந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழகத்தில் இப்பணிகளை தமிழ்நாடு அரசு அதிகாரிகள்தான் செய்ய இருக்கிறார்கள். நிறைய பேர் உதவி செய்யும் நோக்கத்தோடு பணம் கொடுப்பார்கள். யாருடைய உதவியும் இல்லாமல் இருக்க வேண்டும் என சில பேர் உதவி பெற மறுப்பார்கள். அந்த வகையில் சிலர் விஜய் கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Nehru ,Nayinar Nagendran ,Govai ,Bajaj ,President ,Goa Airport ,Monta ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...