×

நாகூர் சந்தனக்கூடு திருவிழாவுக்கு சந்தன கட்டைகள் வழங்குவதற்கான அரசாணை: முதல்வர் வழங்கினார்

சென்னை: நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதனையடுத்து சென்னை தலைமை செயலகத்தில், இந்த ஆண்டிற்கான நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கான ஆணையை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப், நாகூர் தர்கா தலைவர் மற்றும் பரம்பரை அறங்காவலர் காஜி செய்யது முகமது கலிபா சாஹிப் காதிரி ஆகியோரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சா.மு.நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் நா.முருகானந்தம், ஜெ.முகம்மது ஷா நவாஸ் எம்எல்ஏ, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் (கூடுதல் பொறுப்பு) லட்சுமி பிரியா, சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் எம்.ஆசியா மரியம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சிறப்புச் செயலாளர் அனுராக் மிஷ்ரா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) னிவாஸ் ரா.ரெட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Government ,Nagore Sandanakudu Festival ,Chennai ,Nagore Targa the Great Lord Kanthuri Sandanakodu Festival ,Government of Tamil Nadu ,Nagore Targa Great Lord Kanduri Sandanakudu Festival ,Chennai Chief Secretariat ,
× RELATED கேரம் உலகக் கோப்பை போட்டியில்...