×

டெல்லி அரசு பங்களாவில் இருந்து முன்னாள் காங். எம்பி வெளியேற்றம்: தலித் என்பதால் துன்புறுத்தல் என குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி அரசு பங்களாவில் இருந்து காங்கிரஸ் முன்னாள் எம்பி உதித் ராஜ் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். தலித் என்பதால் துன்புறுத்துகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மாஜி எம்பி உதித் ராஜ் டெல்லியின் பண்டாரா பூங்காவில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். அவரது மனைவி சீமா ராஜ் ஓய்வு பெற்ற வருவாய் துறை அதிகாரி(ஐஆர்எஸ்) ஆவார். இந்த நிலையில்பங்களாவில் இருந்து தங்களுடைய குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக உதித் ராஜ் குற்றம் சாட்டினார்.

அவர் கூறுகையில், அரசு பங்களா தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த பொருட்களை துாக்கி வெளியே போட்டுள்ளனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 28ம் தேதி நடக்கிறது. 4 நாட்கள் வரை பொறுத்திருக்க முடியாதா? ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவேன். தலித் என்பதால் மக்களுக்காக குரல் கொடுப்பவன் என்பதால் என்னை துன்புறுத்துகின்றனர் என்றார்.இதுபற்றி சீமா ராஜ் கூறுகையில், ‘‘அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் அரசு பங்களாவில் 6 மாதங்கள் வரை தங்கி இருக்கலாம் என்ற விதி உள்ளது. நான் டிசம்பர் வரை அனுமதி கேட்டேன். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்து பொருட்களை வெளியே போட்டுள்ளனர் ’’ என்றார்.

Tags : Former ,Congress ,Delhi government ,New Delhi ,Udit Raj ,Delhi's ,Bhandara Park… ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...