×

பீகார் சட்டப்பேரவை தேர்தல்; 2,616 வேட்பாளர்கள் போட்டி: அரசியல் கட்சிகள் பிரசாரம் தீவிரம்

பாட்னா,: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 2616 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கு பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ.6ஆம் தேதி 121 தொகுதிகளுக்கும், நவ.11 ஆம் தேதி 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. நவ.14ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. நவம்பர் 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி (தாராபூர்) மற்றும் விஜய் குமார் சின்ஹா ​​(லக்கிசராய்), எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் (ரகோபூர்) ஆகியோர் முதற்கட்ட தேர்தலை சந்திக்கும் முக்கிய தலைவர்கள் ஆவார்கள். அதிகபட்சமாக குர்ஹானி மற்றும் முசாபர்பூர் தொகுதியில் தலா 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதே நேரத்தில் அலாவுலி மற்றும் பர்பட்டாவில் தலா ஐந்து பேர் என மிகக் குறைந்த வேட்பாளர்கள் உள்ளனர்.

நவ.11 ஆம் தேதி 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளுக்கு நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியான நேற்று முன்தினம், 70 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். அதிகபட்சமாக, தலா 22 வேட்பாளர்கள் கயா மாவட்டத்தில் உள்ள கயா டவுன், ரோஹ்தாஸில் உள்ள சசாரம் தொகுதி மற்றும் கைமூர் மாவட்டத்தில் உள்ள செயின்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள். பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான மனுத்தாக்கல் முடிந்து விட்டதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் களம் இறங்கி உள்ளனர். பிரதமர் மோடி நேற்று அங்கு பிரசாரம் மேற்கொண்டார். இந்தியா கூட்டணி கட்சியினரும் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.

மீண்டும் லாலு கட்சியில் இணைவதை விட மரணத்தைத் தேர்ந்தெடுப்பேன்: தேஜ்பிரதாப்: பீகார் முன்னாள் அமைச்சரும், லாலுவின் மூத்த மகனுமான தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி பீகார் தேர்தலில் போட்டியிடுகிறார். மஹூவா சட்டப்பேரவை தொகுதியில் அவர் களம் காண்கிறார். இந்த தேர்தல் குறித்து அவர் கூறுகையில்,’ இந்தியா கூட்டணியில் எனது தம்பி தேஜஸ்வி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிகாரப் பதவியை வகிக்க மக்களின் ஆசீர்வாதம் தேவை. நான் மீண்டும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்குத் திரும்புவதை விட மரணத்தைத் தேர்ந்தெடுப்பேன். எனக்கு அதிகாரப் பசி இல்லை. கொள்கைகளும் சுயமரியாதையும் எனக்கு மிக உயர்ந்தவை. எனக்கு மிகப்பெரிய விஷயம் மக்களுக்காக உழைப்பதுதான். நான் அதை உண்மையாகச் செய்கிறேன், மக்கள் என்னை நேசிக்கிறார்கள், நம்புகிறார்கள். நிச்சயமாக, ஒரு தம்பியாக அவருக்கு எனது ஆசிகள் இருந்தன. நான் சுதர்சன சக்கரத்தை அவர் மீது செலுத்த முடியாது. இருப்பினும் மக்களின் ஆசிகளைப் பெறுபவர்களால் மட்டுமே அதிகாரத்தை அனுபவிக்க முடியும். பாஜ-ஆர்எஸ்எஸ் கூட்டணியின் தீய வடிவம

நிதிஷ்குமார் தலைமையில் பிரமாண்ட வெற்றி பெறுவோம்; பிரதமர் மோடி பேச்சு: பிரதமர் மோடி நேற்று பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். சமஸ்திபூரில் அவர் பேசியதாவது: பீகார் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையின் கீழ் முந்தைய தேர்தல் சாதனைகள் அனைத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை முறியடிக்கும். அரசியலமைப்பின் நகலை கையில் வைத்துக் கொண்டிருப்பவர் (ராகுல்) மக்களை தவறாக வழிநடத்துகிறார். ஓபிசிக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிறைவேற்றி உள்ளது. புதிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நிதிஷ்குமாருக்கு முன்பு பீகாரில் காட்டாட்சி நடந்ததை யாரும் மறக்க மாட்டார்கள். அப்போது பல மாவட்டங்கள் மாவோயிஸ்டு கிளர்ச்சியாளர்களால் பாதிக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சினர். 2014ல் மத்தியில் எனது தலைமையிலான அரசு அமைந்தபோது மாவோயிஸத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என நான் உறுதி அளித்தேன். மிகுந்த பணிவுடனும் திருப்தியுடனும் நான் ஒன்றைக் கூறுகிறேன், மாவோயிஸத்தின் முதுகெலும்பை நாம் தற்போது உடைத்துவிட்டோம். விரைவில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலில் இருந்து விடுபடும். இது மோடியின் உத்தரவாதம்.

 குஜராத், மத்தியப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் எப்படி முந்தைய தேர்தல் சாதனைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி முறியடித்ததோ அதுபோல இம்முறை பீகாரிலும் முறியடிக்கும். இவ்வாறு பேசினார்.

நவம்பர் 14 ஆம் தேதி பீகாரில் தீபாவளி: பீகார் சிவான் மாவட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,’ பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நவம்பர் 14 ஆம் தேதி தான் பீகாரில் உண்மையான தீபாவளி. ரகுநாத்பூர் தொகுதியில் போட்டியிடும் ஷஹாபுதீனின் மகனுக்கு டிக்கெட் கொடுத்ததன் மூலம், லாலு பிரசாத் பீகாரில் ‘காட்டு ராஜ்ஜியத்தை’ மீண்டும் கொண்டுவர விரும்புகிறார் என்பதை நிரூபித்துள்ளார். நாங்கள் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவை நிறுத்துகிறோம் என்றார்.

பா.ஜ போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவு:பீகாரின் கோபால்கஞ்சில் போட்டியிடும் பாஜ போட்டி வேட்பாளர் அனுப் குமார் வஸ்தவாவுக்கு ஆதரவளிப்பதாக ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் நேற்று அறிவித்தார். அந்த தொகுதியில் பாஜவின் அழுத்தத்தின் பேரில் அவரது கட்சி வேட்பாளர் சசி சேகர் சின்ஹா ​​போட்டியில் இருந்து விலகியதால் அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

பா.ஜ கூட்டணி வென்றாலும்

நிதிஷ் முதல்வராக மாட்டார்: தேஜஸ்வி யாதவ் பேச்சு: பீகார் சஹர்சா மாவட்டம் சிம்ரி பக்தியார்பூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: 20 ஆண்டுகள் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்த போதிலும், பீகார் இன்னும் ஏழை மாநிலமாகவே உள்ளது. அந்த கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்க மாட்டார். தேர்தலுக்குப் பிறகு புதிய எம்எல்ஏக்கள் பீகார் முதல்வரை முடிவு செய்வார்கள் என்று அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார். ஒரு பீகாரியாக, எனது மாநிலம் ஏழையாக இருப்பதாலும், வேலையின்மை, ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாலும் நான் வேதனைப்படுகிறேன். பீகாரில் 20 ஆண்டுகள் அவர்கள் ஆட்சி நடத்தினாலும் மாநிலத்தின் தனிநபர் வருமானம் மிகக் குறைவு, விவசாயிகள் ஏழைகளாகவே உள்ளனர். லாலு மோடிக்கு அஞ்சவில்லை என்றால், அவரது மகனும் அஞ்சமாட்டார். எனவே தேஜஸ்விக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 20 ஆண்டுகளில் செய்யத் தவறியதை, நான் 20 மாதங்களில் செய்வேன். பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். 11 ஆண்டுகளில் 22 கோடி வேலைகளின் கணக்கு எங்கே?. ஆனால் தேஜஸ்வி சொல்வத

Tags : Bihar Assembly Elections ,Patna ,Bihar Assembly ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி