சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆந்திராவில் தனியார் பேருந்து தீ விபத்தில், 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய துயரங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க விரைவான முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். நீண்ட தூர தனியார் பேருந்துகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகள் குறிப்பாக வேகக்கட்டுபாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். ஓட்டுநர்கள் ஓய்வில்லாமல் நீண்ட நேரம் ஓட்டுவதை தடுக்க கடுமையான கண்காணிப்பு நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
