ஈரோட்டில் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயிலில் சாணியடி விழா: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாணி வீசி மகிழ்ந்தனர்!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாணியால் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் வினோத திருவிழா விமர்சியாக நடைபெற்றது. தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு தீபாவளி பண்டிகை முடிந்து மூன்றாம் நாள் சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இத்திருவிழா தொடங்குவதற்கு முன்பாக ஊர் குளத்தில் இருந்து கழுதை மேல் சாமியை அமரவைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக கிராமத்தில் உள்ள பசுமாடுகளின் சாணம் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவிக்கப்பட்டது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருண்டையாக உருட்டி ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர். இந்த வினோத திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடக மாநில பக்தர்களும் பங்கேற்றனர்.

Related Stories: