சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு தமிழக காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
காங். கட்சியினர் அனைவரும் மாவட்ட நிர்வாக பிரதிநிதிகளுடன் இணைந்து மழை, வெள்ளம் பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ள மக்களுக்கு உடனடியாக உதவிட வேண்டும்.
