×

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் முடி பயணிக்கு ரூ.35 ஆயிரம் நஷ்டஈடு தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சுந்தர பரிபூரணம் என்ற பயணி கொழும்பிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமான மூலம் பயணம் செய்தபோது அவருக்கு வழங்கப்பட்ட உணவில் முடி இருந்தது. இது தொடர்பாக சென்னை கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பயணிக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசரணைக்கு வந்தது. ஏர் இந்தியா விமான நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விமானத்தில் வழங்கப்பட்ட உணவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தயாரிக்கப்பட்டது. இதற்கு விமான நிறுவனம் பொறுப்பல்ல என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, விமான நிறுவனம் 35 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக பயணிக்கு வழங்க உத்தரவிட்டார்.

Tags : Air India ,Madras High Court ,Chennai ,Sundara Paripuranam ,Colombo ,Chennai Additional Civil Court ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...