- சேலம்
- கலெக்டர்
- பிரின்டா தேவி
- முதலமைச்சர் கோப்பை கைப்பந்து
- முதலமைச்சர் கோப்பை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சேலம், அக்.18: முதலமைச்சர் கோப்பைக்கான வாலிபால் போட்டியில் முதலிடம் பிடித்த சேலம் மாணவிகளுக்கு கலெக்டர் பிருந்தாதேவி வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தில் நடப்பாண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுவதும் நடந்தது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மாநில அளவில் மோதின. இதில் பள்ளி மாணவிகளுக்கான வாலிபால் போட்டியில் சேலம் புனித மரியன்னை மகளிர் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர். இவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. இதனையடுத்து மாணவிகள் நேற்று மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் இருதயாபிரான்சி, உடற்கல்வி ஆசிரியர் லீமாரோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
