இடைப்பாடி, அக்.18: கொங்கணாபுரத்தில், தம்பியை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த அண்ணன் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணபுரம், எருமப்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி(60). விவசாயியான இவரது அண்ணன் குப்புசாமி(63). இவர்களுக்கிடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி முத்துசாமி மற்றும் அண்ணன் மகனான குப்புசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கத்தியால் குத்தியதில் முத்துசாமி உயிரிழந்தார். இதுதொடர்பாக குப்புசாமி(38), அவரது மனைவி கவிதா(30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலையான முத்துசாமியின் அண்ணன் குப்புசாமியை நேற்று போலீசார் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
