பிரியாணிக்கு முண்டியடித்த பாஜகவினர்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி, டிச. 28:  கள்ளக்குறிச்சி நடைபெற்ற நிர்வாகிகள் மாநாட்டிற்கு வந்திருந்த பாஜக தொண்டர்கள் பிரியாணி வாங்குவதற்கு முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக சார்பில் பிற அணி நிர்வாகிகள் மாநாடு கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூர் செல்லும் சாலை பகுதியில் தனிநபருக்கு சொந்தமான காலி மனையில் நேற்று நடந்தது. பாஜக மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,  மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  

இந்த மாநாட்டில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் ஒருவர் கூட கொரோனா தடுக்கும் விதமாக முகக்கவசம் அணியவில்லை. மாநில தலைவர் முருகன் பேசிக்கொண்டு இருந்தபோது  கூட்டத்தின் பின்புறத்தில் அமர்ந்து இருந்த தொண்டர்கள் வாங்கிய காசுக்கு கூட்டத்திற்கு வந்து கணக்கு காட்டியாச்சி மணிக்கணக்கில் காத்திருக்க முடியாது என கூறி கொண்டே, பெரும்பாலான தொண்டர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதனால் அவசர அவசரமாக பேச்சை முடித்து கொண்டார் முருகன்.

கூட்டத்தின் பின்புற பகுதியில் இரண்டு மினி டெம்போவில் உணவு பொட்டலம் கொடுத்து கொண்டு இருந்ததை பார்த்த தொண்டர்கள் பிரியாணி பொட்டலாமா? எனக்கும் கொடுங்க என கூறிக்கொண்டு முண்டியடித்து வாங்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பொட்டலத்தில் தக்காளி சாதம் இருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.செலவுக்கு பணம், பிரியாணி சாப்பாடு என கூறி கூட்டத்திற்கு அழைத்தார்கள். இதவாங்கவா வேலை வெட்டியில்லாமல் வேனில் அழைத்து வந்தார்கள் என தொண்டர்கள் முனுமுனுத்து கொண்டே சென்றனர்.

ஆன்லைன் லாட்டரி விற்பனை வழக்கு

Related Stories:

>