தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி நீடிக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

சிதம்பரம், டிச. 28: சிதம்பரத்தில் பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

தமிழகத்தில் பாஜக -  அதிமுக கூட்டணி நீடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். பல இடங்களில் மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வாக கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அனுமதி இல்லை என்பது இது எந்த விதத்தில் நியாயம்.

அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் அனுமதி அளிக்கப்படுகிறது. அதிமுகவினர் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதை ஏற்றுக் கொள்வது குறித்து எங்களது கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். தமிழகத்தில் வீடு கட்டுதல், கழிவறை கட்டுதல் போன்ற திட்டங்கள் அனைத்திற்குமே மத்திய அரசு நிதி தருகிறது. அதனால் வீடு கட்டும் இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அப்படி வைக்காவிட்டால் இவர்கள் நன்றி கெட்டவர்கள். கமலஹாசன், பிரஸ் மீட் கொடுக்கும்போது மட்டும் அரசியல்வாதியாக இருந்து விட்டு அதன் பிறகு வியாபாரியாக மாறும் அரசியல், தமிழகத்தில் எடுபடாது, என்றார்.

Related Stories:

>