திண்டிவனத்தில் சாராயம், கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

திண்டிவனம், டிச. 28: திண்டிவனம் கருணாவூர் பாட்டை சுடுகாடு அருகே உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சுடுகாடு அருகே திண்டிவனம் உமாபதி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விக்கி (எ)விக்னேஷ்(27) என்பவர் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து, அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் கிடங்கல் 2 ஏரிக்கரை பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திண்டிவனம் கிடங்கல் 2 ராஜன் தெருவை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (24) என்பவர் சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளார்.

அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 லிட்டர் விஷ சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>