×

ரூ.5 கோடிக்கு கொப்பரை ஏலம்

 

ஈரோடு, அக். 13: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 5,421 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், முதல் தரக் கொப்பரைகள் 2,377 மூட்டைகள் வரப் பெற்றிருந்தன.
இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.209.99க்கும், அதிகபட்சமாக ரூ.224.99க்கும் விற்பனையாகின. இரண்டாம் தரக் கொப்பரைகள் 3,044 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ.30.39க்கும், அதிகபட்சமாக ரூ.222.22க்கும் விற்பனையாகின.
மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரம் கிலோ எடையிலான கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.5 கோடியே 8 லட்சம் ஆகும் என விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags : Copra ,Erode ,Perundurai Agricultural Producers Cooperative Marketing Society ,
× RELATED ஈரோட்டில் பாஜவினர் ஆர்ப்பாட்டம்