×

‘’வாங்க கற்றுக் கொள்வோம்’’எண்ணூர், மணலியில் தீ பாதுகாப்பு ஒத்திகை

 

திருவொற்றியூர்: தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவின்படி, மாவட்ட அலுவலர் லோகநாதன் முன்னிலையில், எண்ணூர் தீயணைப்பு நிலையம் அருகே தீ பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் நிலைய அலுவலர் முரளி தலைமையில் நடைபெற்றது. இதில், ‘’தீயணைப்பான்களை எப்படி பயன்படுத்துவது, சமையல் எரிவாயு, மின்சாரம், வாகனம் மற்றும் பட்டாசு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் தீ விபத்தை எவ்வாறு தடுப்பது, பேரிடர் காலங்களில் தங்களை தாங்களே எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். அத்துடன் பிரத்யேக தீயணைப்பான்கள் மூலம் செயல்முறை பயிற்சி அளித்தனர்.

தீ விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அதை பாதுகாப்பது குறித்த பதாகைகளை பதாகைகளை அனைவரும் கையில் ஏந்தி நின்றனர். இந்த முகாமில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுபோல், மணலி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில், ‘’வாங்க கற்றுக் கொள்வோம்’’ நிகழ்ச்சி நடைபெற்றது.

 

Tags : Ennore, Manali ,Tamil Nadu Fire Department ,Seema Agarwal ,Ennore Fire Station ,District ,Officer ,Loganathan ,Station ,Murali ,
× RELATED பெண் கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!