×

முத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1.25 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

வெள்ளகோவில், அக். 12: முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்திற்கு முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 25 பேர், 4794 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், முதல்தரம் ஒரு கிலோ ரூ.71.65க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.58.15க்கும், சராசரி ரூ.66.20க்கும் ஏலம் போனது. மொத்தமாக ரூ.1.25 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம் போனது. நடந்த கொப்பரை ஏலத்தில், 384 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.218.20க்கும், குறைந்த பட்சம் ரூ.133.10க்கும், மொத்தம் 384 கிலோ கொப்பரை, ரூ.76 ஆயிரத்துக்கு ஏலம் போனது. 12 விவசாயிகள் பங்கேற்றனர் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சங்கீதா தெரிவித்தார்.

Tags : Muthur Regulated Sales Hall ,Vellakovil ,Muthur ,
× RELATED மாணிக்காபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்