×

பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு பாஜ இதை அனுமதித்தது வெட்கக்கேடானது: கனிமொழி எம்பி காட்டம்

சென்னை: ஆப்கானிஸ்தானின் தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி இந்தியா சுற்றுப்பயணம் வந்தார். டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அந்த சந்திப்பிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அழைக்கப்படவில்லை, அனுமதிக்கப்படவும் இல்லை. இது தற்போது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெண் பத்திரிகையாளர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொள்ளக் கூடாது என தாலிபான் வெளிநாட்டுத் துறை அமைச்சர் வலியுறுத்துகிறார், மேலும் இந்திய அரசு இதனைச் சமரசமாக ஏற்கிறதா? இந்திய மண்ணில் இதை எப்படி அனுமதிக்க முடியும்? பாஜ அரசு மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இத்தகைய பிற்போக்குத்தனமான, பாரபட்சமான கோரிக்கையை நமது சொந்த நாட்டில் ஏற்க அனுமதிப்பது எப்படி? இது ராஜதந்திரம் அல்ல; நமது ஒருமைப்பாட்டையும், சமத்துவத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் மீறி இந்தியாவின் நம்பிக்கையைச் சீர்குலைத்த வெட்கக்கேடான சமரசம் ஆகும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Katham ,Chennai ,Foreign Minister ,Afghanistan ,Amir Khan Muthagi ,India ,Afghan embassy ,Delhi ,
× RELATED பேரவைத் தேர்தல்: நாளை முதல் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்