சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது

கள்ளக்குறிச்சி, டிச. 27:    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த எலவடி ஊராட்சிக்கு உட்பட்ட கூலிகுப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பழனிசாமி(38). டெம்போ டிரைவர். இவர் 11 வயது பள்ளி சிறுமியை சம்பவத்தன்று ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியில் யாரிடமும் சொல்ல கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பழனிசாமியிடம் தட்டிகேட்டதற்கு ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Related Stories:

>