×

நேரம் பார்க்க தவறிய ஆனந்த் தோல்வி

 

செயின்ட் லூயிஸ்: கிளட்ச் செஸ் லெஜண்ட்ஸ் பிளிட்ஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், ரஷ்யாவை சேர்ந்த மற்றொரு முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவிடம் தோல்வியை தழுவினார். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் லெஜண்ட்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த பிளிட்ஸ் பிரிவு போட்டியில் ஆனந்த் வெல்லும் நிலையில் இருந்தபோதும், கடிகாரத்தில் வீணாகும் நேரத்தை கவனிக்கத் தவறியதால் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார்.

இதுவரை 4 போட்டிகளில் ஆடி 2ல் வெற்றி, 2ல் டிரா செய்துள்ள காஸ்பரோ, 8.5 – 3.5 என்ற புள்ளிக் கணக்கில் முன்னணியில் உள்ளார். இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ள நிலையில், புதிய விளையாட்டு விதிகள்படி, அவற்றில் வெல்வதன் மூலம் ஆனந்த், பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இதுவரை அவர் குறிப்பிடத்தக்க வகையில் ஆடாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

 

Tags : Anand ,St. Louis ,Viswanathan Anand ,India ,Garry Kasparov ,Russia ,Clutch Chess Legends Blitz tournament ,
× RELATED இந்திய கிரிக்கெட் வீராங்கனை சுவாரஸ்ய...