×

நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்

காஞ்சிபுரம், அக்.10: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (11ம் தேதி) அன்று காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் தாமல் உத்திரமேரூர் வட்டத்தில் பினாயூர், வாலாஜாபாத் வட்டத்தில் சங்கராபுரம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சிறுமாங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் மாடம்பாக்கம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. மேற்கண்ட கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி, மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும்.

Tags : Kanchipuram ,Kanchipuram District ,Collector ,Kalaichelvi Mohan ,Thamal ,Kanchipuram taluk ,Pinayur ,Uthiramerur taluk ,Sankarapuram ,Walajabad taluk ,Thirupperumbudur taluk… ,
× RELATED காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில்...