- இலங்கை கடற்படை
- முதல்வர்
- மத்திய அமைச்சர்
- சென்னை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- வெளியுறவு அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 47 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 2025ம் ஆண்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தூதரக ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
