×

மாநில அளவிலான ஓபன் சிலம்பப் போட்டி குளித்தலை பள்ளி மாணவர்கள் சாதனை

 

குளித்தலை, அக். 7: மாநில அளவிலான ஓப்பன் சிலம்பப் போட்டி திருச்சி மாவட்டம் ரங்கத்தில் நடைபெற்றது, அதில் கரூர் மாவட்டம் குளித்தலை வீரக்கலை சிலம்பம் கலைக்கூடம் பயிற்சி பள்ளியின் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். தனித்திறமை போட்டியில் 6 பேர் முதலிடமும் 6 பேர் இரண்டாம் இடமும் 8 பேர் மூன்றாம் இடமும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்கள். வெற்றி பெற்ற மாணவர்களை திமுக வீர கலைரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரமான செந்தில் பாலாஜி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் செயலாளர் தியாகராஜன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் விக்ரம், ஷிட்டோ ரியூ கொஷி கராத்தே தலைமை பயிற்சியாளர் ஷிகான் ரங்கம் ஜி துவாரகன், ரென்சி திருச்சி சுரேஷ்குமார், கரூர் மாவட்ட தலைமை பயிற்சியாளர் செந்தில்வேலன், திருச்சி சென்சாய்கன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Kulithalai school ,Kulithalai ,Trichy district ,rangam ,Kulithalai Veerakalai Silambam Kalaikoodam Training School ,Karur ,
× RELATED கரூர் மாவட்டத்தில் பதிவறை எழுத்தர் பணிக்கு நேர்காணல்