×

காரில் குட்கா கடத்திய தவெக நிர்வாகி கைது

 

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி சந்தைப்பேட்டை அருகில் நேற்று முன்தினம் கார் ஒன்றில் இருந்து தடை செய்யப் பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை, மளிகை, பெட்டி கடை வியாபாரிகளுக்கு சப்ளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், மேச்சேரி போலீசார் விரைந்து சென்று அந்த காரை சுற்றிவளைத்தனர். காரில் மேச்சேரி பேரூர் தவெக செயலாளர் சுர்ஜித் (27) என்பவர் இருந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஹான்ஸ், குட்கா பொருட்களை கடத்தி வந்து உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து, காரில் இருந்த 170 கிலோ ஹான்ஸ், 30 கிலோ புகையிலை பொட்டலங்கள், 27 கிலோ கூலீப் என மொத்தம் 227 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தவெக நிர்வாகி சுர்ஜித்தையும் கைது செய்தனர். காரில் குட்கா கடத்தி வந்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் மேச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Thaveka ,gutka ,Mettur ,Hans ,Mecheri Marketpet ,Salem district ,
× RELATED டெல்லி செங்கோட்டை அருகே நடந்த...