ஆரணி அடுத்த இரும்பேடு ஊராட்சியில் நீரில் மூழ்கி இறந்த சிறுவன் குடும்பத்துக்கு ₹1 லட்சம் அமைச்சர் வழங்கினார்

ஆரணி, டிச.24: ஆரணி ஊராட்சி ஒன்றியம் இரும்பேடு ஊராட்சியில் அரசு மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சங்கர், செய்யாறு சுகாதார பணிகள் துணை இயக்குனர் அஜிதா, பிடிஓக்கள் மூர்த்தி, வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். எஸ்.வி.நகரம் வட்டார மருத்துவ அலுவலர் சுதா வரவேற்றார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மினி கிளினிக் திறந்து வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார்.

தொடர்ந்து, ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் இரும்பேடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் மகன் கோகுல் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹1 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார். அப்போது, ஆர்டிஓ ஜெயராமன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜவிஜயகாமராஜ், தாசில்தார் செந்தில்குமார், சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர் தரணி வெங்கடேசன், அதிமுக ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி.சேகர், திருமால், நகர செயலாளர் அசோக்குமார், மேற்கு ஆரணி ஒன்றிய குழுத்தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராசன், அம்மா பேரவை செயலாளர் பாரிபாபு, முன்னாள் நகர மன்ற தலைவர் கருணாகரன், சேவூர் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: