×

நோபல் பரிசு வேண்டுமெனில் காசா போரை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் : பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வலியுறுத்தல்!!

வாஷிங்டன் : அமெரிக்கா அதிபர் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காசா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மேக்ரான், “ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் காசாவில் அமைதி திரும்ப வேண்டுமென ட்ரம்ப் வலியுறுத்தினார். காசா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பால் அழுத்தம் தர முடியும்.

காசா மீது போரை நடத்துவதற்கு அமெரிக்கா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்குகிறது. அமெரிக்காவுக்கு மட்டுமே காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் ஆற்றல் உள்ளது. ஏற்கனவே ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக பெருமிதம் தெரிவிக்கும் ட்ரம்ப், காசா போரை நிறுத்த வேண்டும். காசா போரை நிறுத்தினால் மட்டுமே அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Trump ,Gaza ,Chancellor ,Emmanuel Macron ,Washington ,President ,United ,States ,President Trump ,France ,New York, United States ,Macron ,UN ,Council General Meeting ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...