×

வெடிகுண்டு மிரட்டல்; சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்: தீவிர சோதனை

சென்னை: நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்துக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டுள்ளது. மும்பையில் இருந்து 182 பேருடன் தாய்லாந்து புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. விமான கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை விமான நிலையத்திற்கு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார். மிரட்டல் வந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் 7.20-க்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமான பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். தரையிறங்கிய இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்துக்குள் சந்தேகப்படும் படியான பொருட்கள் ஏதும் உள்ளதா என தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். விமானம் முழு சோதனை செய்யப்பட்ட பின்பே சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று கூறப்படுகிறது.

Tags : CHENNAH ,Chennai ,Indigo Airlines ,Naduan ,Indigo ,Mumbai ,Phuket, Thailand ,MUMBAI AIRPORT ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...