அறந்தாங்கியில் மின்வாரிய ஊழியரை தாக்கியவர் கைது

அறந்தாங்கி, ஆக. 30: அறந்தாங்கியில் மின்சாரவாரிய ஊழியரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டையில் மின் கம்பிகளுக்கு இடையூராக இருந்த மரங்களின் கிளையை வெட்டும் பணியில் மின்சாரவாரிய ஊழியர் சரத்குமாரை (34) ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (36). மரக்கிளையை வெட்ட எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் மின்வாரிய ஊழியர் சரத்குமாரை தகாத வார்த்தையில் பேசிய தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அபோது அந்த பகுதியில் இருந்த ஒரு சமூக ஆர்வலர் ஒருவர் அந்த சம்பவத்தை பதிவு செய்து சமூக வளைதலைத்தில் பரவிட்டுள்ளார், புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீசை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: