ஏழுமலையான் மீது அதீத பக்தி; 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக கொடுக்க முன்வந்த பக்தர்..!!

ஆந்திரா: ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக கொடுக்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார். தனது தொழிலில் ஈட்டிய வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதம் பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்க உள்ளார். இத்தகைய தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.140 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மங்களகிரியில் நடந்த வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழிலதிபர் ஒருவர் புதிய நிறுவனம் தொடங்கினார். அந்த நிறுவனம் அபார வெற்றியை பெற்றதும். அந்த நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் அவர் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி முதல் ரூ.7 கோடி வரை லாபம் ஈட்டி உள்ளார்.

இந்த வெற்றி ஏழுமலையானின் அருளால் கிடைத்ததாக அவர் நம்பி தனது நன்றி கடனாக நன்கொடையை வழங்க முடிவு செய்துள்ளார். தினமும் ஏழுமலையான் சிலை 120 கிலோ தங்க நகைகளால் அலங்கரிக்கப்படுவதை கேள்விபட்ட பக்தர் அதைவிட ஒரு கிலோ கூடுதலாக 121 கிலோ தங்கத்தை வழங்க முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் நன்கொடை அளிக்கும் பக்தரின் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை என்றும் விளக்கமளித்தார். இத்தகைய செய்தி நாடு முழுவதும் உள்ள பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: