×

பெல் நிறுவன நுழைவாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் வாயிற்கூட்டம்

திருவெறும்பூர், ஆக. 15: திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில், எல்சிஎஸ் என்கின்ற ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சார்பில், உற்பத்தி போனஸ் வழங்க கோரி வாயிற்கூட்டம் நடைபெற்றது. பெல் நிறுவன நுழைவாயில் முன்பு நடந்த இந்த கூட்டத்திற்கு எல்சிஎஸ் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத்தின் மாநில தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் சொசைட்டி தொழிலாளர்களுக்கு உற்பத்தி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மேலும் பெல் வளாகப் பகுதியில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக சங்கத்தினர் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் திக, எம்.எல்.எப் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம், ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Bell Company ,Thiruverumpur ,Thiruverumpur Bell Company ,LCS ,President ,Kamaraj… ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்...